மங்களூரில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படவில்லை. இதனால் ஒன்றிய பகுதியில் ஏதேனும் தீவிபத்து ஏற்பட்டால் அதனை அணைக்க நீண்ட தொலைவில் உள்ள வேப்பூர், திட்டக்குடியில் இருந்துதான் தீயணைப்பு வாகனம் வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அதற்குள் தீயினால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு விடுவதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க மங்களூரில் தீயணைப்பு நிலையம் அமைத்துத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.