சிதம்பரம் அடுத்த இடையன்பால் சொரி ஊராட்சியில் குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடக்கின்றன. இதனை முறையாக அள்ளி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதோடு, பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் உருவாகி உள்ளது. எனவே குப்பைகளை முறையாக அள்ளி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.