கோவை-திருச்சி சாலையில் மேம்பாலம் கட்டுவதற்காக பல்வேறு இடங்களில் நிழற்குடைகள் அகற்றப்பட்டன. ஆனால் மேம்பால கட்டுமான பணி முடிந்து பயன்பாட்டிற்கு வந்து பல ஆண்டுகள் கழித்தும் தற்போது வரை அகற்றப்பட்ட பயணிகள் நிழற்குடை மீண்டும் அமைக்கப்படாமல் உள்ளது. குறிப்பாக ஒலம்பஸ் பகுதியில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் பெண்கள், குழந்தைகள் கஷ்டப்படுகின்றனர். இங்கு உடனடியாக நிழற்குடை அமைக்க வேண்டும்.