நாய்கள் தொல்லை

Update: 2025-03-23 10:18 GMT
கரூர் மாவட்டம், செக்குமேடு பாலத்துரறை பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகிறது. இந்த நாய்கள் அப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பல ஆடுகளை கடித்து வருகிறது. மேலும் சாலையில் நடந்து செல்லும் பொது மக்களையும், தெருவில் நிற்கும் குழந்தைகளையும் ,பேருந்துக்கு செல்லும் மாணவ, மாணவிகளையும் துரத்தி துரத்துகிறது. இதனால் பல்வேறு தரப்பினரும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்