புகார்பெட்டி செய்தி எதிரொலி

Update: 2025-03-16 17:51 GMT
சங்கராபுரம் அடுத்த காட்டுவன்னஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் தார் சாலையை யொட்டி உள்ள கழிவுநீர் கால்வாயை மூடி போட்டு மூடப்படாமல் இருந்தது. இதனால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் உருவானது. இது குறித்த செய்தி புகார்பெட்டியில் வெளியானது. இதையடுத்து விபத்தை தவிர்க்கும் வகையில் அந்த கழிவுநீர் கால்வாயை மூடிபோட்டு மூடினர். இதை பார்த்து மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கும், தினத்தந்திக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்