சங்கராபுரத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி நிலையம் செல்லும் சாலையில் 3 டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ளன. இங்கு மதுவாங்கி குடிப்பவர்கள் போதை தலைக்கேறியதும் அந்த வழியாக செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை கிண்டல் செய்து தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த வழியாக பெண்கள், மாணவிகள் செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே மதுப்பிரியர்களின் அட்டகாசத்தை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.