மதுரை மாவட்டம் கிழக்கு ஒன்றியம் வெள்ளியங்குன்றம் கிராமத்திற்கு பெரியார் பஸ் நிலையத்திலிருந்து போதிய அளவு பஸ் வசதி இல்லை. இதனால் அப்பகுதியில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பணிக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து அப்பன் திருப்பதி வழியாக வெள்ளியங் குன்றம் வரை செல்ல கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.