மதுரை ஹார்விபட்டியை அடுத்த எஸ்.ஆர்.வி நகர் பகுதியில் கொசுத் தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இந்த கொசுக்களால் டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.