பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் பகுதியில் கடலூர் மாவட்டம், திட்டக்குடியை இணைக்கும் வெள்ள ஆற்றில் பழைய கீழ் பாலம் உள்ளது. இதன் அருகே கோழி, ஆடுகளின் இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுவதினால் இப் பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.