பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூரில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கிராம ஊராட்சி, கிராம நிர்வாக அலுவலகம், கால்நடை மருத்துவமனை என பல அரசு அலுவலகங்கள் செல்பட்டு வருவதால் இப்பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் அரசு மதுபானக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் பெண்கள், மாணவிகள் பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் மதுப்பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு அரசு அலுவலக கட்டிடங்களில் அமர்ந்து மது அருந்துகின்றனர். மேலும் மதுபோதையில் இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.