கழிவறை இன்றி பக்தர்கள் அவதி

Update: 2025-03-16 09:43 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கோதண்டபுரம் ஊராட்சி, குமரமலையில் பால தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில் இந்த கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு என கழிவறை அமைக்கப்படாமல் உள்ளதால் அவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சிலர் கோவிலின் அருகே இயற்கை உபாதை கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்