சிதிலமடைந்த கோவில்

Update: 2025-03-16 09:43 GMT

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம், இடையாத்திமங்களம் கிராமத்தில் பழமைவாய்ந்த பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து உள்ளது. இதனால் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சத்துடனேயே சாமி தரிசனம் செய்யும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த கோவிலை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்