கரூர் மாவட்டம் புகழூர் அரசு மதுபானக்கடை அருகே பாலத்துறை சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் வாத்து கறி விற்பனை செய்யும் கடைகள் மற்றும் கறிக்கோழி கடைகளில் இருந்து கோழி கழிவுகளை கொண்டு வந்து சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நெடுகிலும் கொட்டுகின்றனர். மேலும் பிளாஸ்டிக் கழிவுகள், கட்டிட இடிபாடுகள் உள்ளிட்டவை கொண்டுவந்து கொட்டப்படுகிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால் இந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. மேலும் நோய் தொற்றும் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.