இரணியல் மார்த்தாண்டேஸ்வரர் கோவில் பின்பகுதியில் வள்ளியாற்றுக்கு மறுபக்கம் பல ஏக்கர் நிலங்களில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகின்றது. இங்கு விவசாய நிலங்களின் பாசன வசதிக்காக வள்ளியாற்று தண்ணீரும், மழைநீரும் பாய்வதற்காக கால்வாய் அமைக்கப்பட்டள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த கால்வாயை முறையாக பராமரிக்காததால் அடைபட்டு தண்ணீர் வடிந்தோட முடியாததால் மழை காலங்களில் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி தென்னை மரங்கள் அழியும் நிலை ஏற்படுகிறது. எனவே, விவசாயிகள் நலன்கருதி அடைபட்ட கால்வாயை தூர்வாரி பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அரவிந்த் தவமணி, இரணியல்.