ஈரோடு முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே உள்ள பெரும்பள்ளம் ஒடை பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி உள்ளது. இதனால் பாம்பு போன்ற விஷஜந்துகளின் நடமாட்டம் காணப்படுகிறது. மேலும் மதுப்பிரியர்கள் மது குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே வீசிவிட்டு செல்கின்றனர். எனவே புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?