மதுரை நகர் வில்லாபுரம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். மேலும் இந்த தெருநாய்கள் சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்களின் பின்னால் துரத்தி சென்று விபத்தை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு அட்டகாசம் செய்யும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?