திண்டுக்கல் அறிவுத்திருக்கோவில் அருகே, பாலாஜி நகரில் மின்கம்பம் சேதமடைந்து உள்ளது. மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுக்கள் பெயர்ந்து விழுந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிவதால் எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து கீழே விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை உடனே அகற்ற வேண்டும்.