திண்டுக்கல் மாநகராட்சி பர்மா காலனி பகுதியில் உள்ள சிறுவர் பூங்கா பராமரிப்பு இல்லாததால் புதர்மண்டி கிடக்கிறது. பூங்கா நடைபாதையில் புற்கள் வளர்ந்துள்ளதால் காலை, மாலையில் பூங்காவில் நடைபயிற்சி செய்பவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே பூங்காவை சீரமைக்க வேண்டும்.