விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியல் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். மேலும் இருச்சக்கர வாகன ஓட்டிகளை நாய்கள் துரத்துவதால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.