தொழுதூர் சாா்பதிவாளர் அலுவலகம் தற்போது சேதமடைந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள இக்கட்டிடத்திற்கு பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனே வந்து செல்கின்றனர். எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் புதிய சார்பதிவாளர் அலுவலகம் கட்டும் பணியை விரைந்து தொடங்கி முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.