சங்கராபுரம் அடுத்த காட்டுவன்னஞ்சூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள வளைவில் கழிவுநீர் கால்வாய் மூடப்படாமல் திறந்தநிலையில் உள்ளது. இதனால் அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் கால்வாயில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாய நிலை உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் நிகழ்வதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.