கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், புகழூர் நான்கு ரோடு பகுதியில் பொதுமக்களின் நலன் கருதி பொது சுகாதார வளாகம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த பொது சுகாதார வளாகம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது அதன் சுவற்றில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த பொது சுகாதார வளாகத்தை பயன்படுத்த இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்துள்ள சுகாதார வளாகத்தை சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.