காஞ்சீபுரம் மாவட்டம், மாடம்பாக்கம் ஊராட்சியில் உள்ள வள்ளலார் நகர் பகுதியில் ஏரியில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றனர். இதனால் நிலத்தடி நீர் மாசடைவதோடு பல்வேறு தொற்று நோய் ஏற்படும் அபாய நிலை உள்ளது. குப்பை கொட்டப்படுவதை தடுக்க மாடம்பாக்கம் ஊராட்சி நிர்வாகமும், குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.