சாலையோரம் ஆபத்தான பள்ளம்

Update: 2025-03-09 13:16 GMT
வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளம் ஆர்தர்நகர் செல்லும் வழியில் திருமண மண்டபம் எதிரில் சாலையோரம் குடிநீர் குழாய் வால்வு அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் அதனை முறையாக மூடி வைக்காமல் சென்று விட்டனர்.. இதனால் அந்த வழியாக இரவில் செல்கிறவர்கள் நிலைதடுமாறி பள்ளத்தில் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே குடிநீர் குழாய் வால்வு தொட்டியை முறையாக மூடி வைப்பதற்காக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்