பழுதடைந்த கண்காணிப்பு கேமராக்கள்

Update: 2025-03-09 13:14 GMT

பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் பஸ் நிறுத்தம் அருகில் சட்டவிரோத செயல்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கண்காணிப்பு கேமரா பழுதடைந்து உள்ளதால் இப்பகுதியில் திருட்டு உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்துள்ள கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்