இருக்கை வசதி இல்லாத நூலகம்

Update: 2025-03-09 12:18 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பேரளி ஊராட்சி மருவத்தூர் கிராமத்தில் கிளை நூலகம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நூலகத்திற்கு தினமும் 35-க்கும் மேற்பட்ட வாசகர்கள் வந்து புத்தகம் படிக்கின்றனர். இந்நிலையில் அவர்கள் அமர்ந்து படிக்க போதிய இருக்கை வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனால் வாசகர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்