மரக்காணம் அருகே கூனிமேடு ஊராட்சியில் உள்ள ஏரியின் மதகு பலத்த சேதமடைந்துள்ளது. இதனால் மழைநீரை சேமித்து வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருவதால் அப்பகுதியில் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதியில் நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க ஏரியின் மதகை உடனே சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.