மதுரை மாவட்டம் அழகர்கோவில் ஆமந்தூர்பட்டி என்னும் பகுதியில் போதிய பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், ஆஸ்பத்திரி செல்லும் கர்ப்பிணிகள் மற்றும் முதியோர்கள் நீண்ட தூரம் நடந்து சென்று பஸ் ஏறி செல்வதால் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வழிதடத்தில் கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.