குடியிருப்பு பகுதியில் தேங்கும் மழைநீர்

Update: 2025-03-02 11:53 GMT

தஞ்சை மானம்புச்சாவடி சிவராயர் தோட்டம் முதல் தெரு சீனிவாசகாலனி பகுதியில் மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதி, சாலைகளில் மழைநீர் குளம் போல தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்