தஞ்சையை அடுத்த தொண்டராயன்பாடி கிராமப்பகுதி வழியாக வெண்ணாறு செல்கிறது. இப்பகுதியில் உள்ள வெண்ணாற்றில் செடி,கொடிகள், நாணல்கள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் நீர் பாய்ந்தோடி செல்வதில் தடை ஏற்படுகிறது. ஆற்றில் அடித்துவரப்படும் குப்பைகளில் செடி,கொடிகளில் சிக்கி தேங்கி கிடக்கின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெண்ணாற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.