கோவை ரெட்பீல்டு சாலையில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை அந்த வழியாக செல்பவர்களை துரத்தி செல்கின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அச்சப்படுகிறார்கள். அதுவும், இரவு நேரத்தில் தெருநாய்களின் அட்டகாசம் அதிக அளவில் உள்ளது. மேலும் கூட்டம், கூட்டமாக சாலையில் நடமாடுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே அங்கு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.