புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி கருப்பர் கோவில் தொடங்கி பெரிய அக்னி ஆற்றுப்பாலம் வரை சாலையின் இருபுறமும் முட்புதர்கள் மண்டி கிடக்கும் பகுதியில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. காலையில் நடை பயிற்சி செய்பவர்கள் மூக்கை பிடித்துக் கொண்டுதான் செல்லவேண்டி உள்ளது. பஸ் பயணிகளும் பாதிக்கப்படுகின்றனர். நீர் நிலைகள் அசுத்தமாகின்றன. சுகாதாரக் கேட்டால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.