கடிக்க துரத்தும் தெருநாய்கள்

Update: 2025-03-02 09:50 GMT

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி நகரப்பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. குறிப்பாக கரூர் ரோடு, புங்கம்பாடி ரோடு, தாராபுரம் ரோடு, ராஜபுரம் ரோடு ஆகிய பகுதிகளில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை பகல் நேரத்தில் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொண்டு திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதினால் இந்த வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் நாய்களின் மீது வாகனத்தை மோதி நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை தெருநாய்கள் கடிக்க துரத்துவதினால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்