சீரமைக்கப்பட்டது

Update: 2025-03-02 08:15 GMT

நாகர்கோவில் இருளப்பபுரம் பாவலர் நகர் பகுதியில் சாலையில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் ஒரு இடத்தில் சாக்கடை குழாயின் மூடி சேதமடைந்து காணப்பட்டது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதுபற்றி ‘தினத்தந்தி’ புகார்பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த பாதாள சாக்கடை குழாய் மூடியை சீரமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்