போக்குவரத்து நெரிசல்

Update: 2025-02-23 18:00 GMT

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையம் பின்புறம் இயங்கி வரும் அரசு மருத்துவமனை மற்றும் சுற்றி உள்ள இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் அப்பாதைகளில் அரசு பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் ஆம்புலன்ஸ் சென்று வரவோ நிறுத்தவோ மிகவும் சிரமம் ஏற்படுகின்றது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்