மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதி டி.வி.எஸ்.நகர் அடுத்த கோவலன் நகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.. இதனால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்டட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.