காட்சிப்பொருளான கழிப்பறை கட்டிடம்

Update: 2025-02-23 17:54 GMT
பரங்கிப்பேட்டை ஒன்றியம் பூவாலை ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக கழிப்பறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடம் கட்டப்பட்டு ஓராண்டாகியும் இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் பள்ளி மாணவர்கள் இயற்கை உபாதையை கழிக்க திறந்தவெளியை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்