கல்வராயன்மலையில் வெள்ளிமலை- கரியாலூர் செல்லும் சாலையில் படகு குழாம் அருகே சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் பூங்கா புதர் மண்டி காணப்படுகிறது. மேலும் அங்குள்ள விளையாட்டு உபகரணங்களும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அதனை சிறுவர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க சேதமடைந்த பூங்காவை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.