சேலம் ஜங்ஷன் அருகில் ரெட்டிப்பட்டி பைபாஸ் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் தடுப்புச்சுவர் ஒருசில இடங்களில் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் போது உயிர் இழப்புகள் ஏற்படும் அபாயநிலை உள்ளது. எனவே பாலத்தில் சேதமடைந்துள்ள பகுதிகளை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது.