விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்மந்தபுரம் 11-வது வார்டு பகுதிகளில் கொசுத் தொல்லை அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் அப்பகுதி மக்கள் இரவில் தூக்கமின்றி மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் இந்த கொசுக்களால் டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் கொசு மருந்து தெளித்து கொசுக்களை ஒழிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.