விருதுநகர் மாவட்டம் பெரிய வள்ளிக்குளம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த தெருநாய்களால் அப்பகுதி பொதுமக்கள், பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அச்சமடைந்து வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளுக்கு விபத்தை ஏற்படுத்தும் வகையில் நாய்கள் துரத்துகிறது. எனவே இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?