பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கலெக்டர் அலுவலக வளாக சுற்றுப்பகுதியில் செடி- கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. மேலும் சில இடங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு அள்ளப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், புதர்மண்டி கிடக்கும் பகுதியில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் இருக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.