கரூர் மாவட்டம், மண்மங்கலத்தில் மேம்பாலம் கட்டும் பணியை தொடங்கியபோது இப்பகுதியில் ஏற்கனவே இருந்த நிழற்குடை அகற்றப்பட்டது. இதையடுத்து பஸ் பயணிகளின் கோரிக்கையை ஏற்று ஒருபுறம் மட்டும் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் எதிர்புறத்தில் நிழற்குடை அமைக்கப்படாமல் இருந்தது. இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டதை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மறுபுறத்திலும் பயணிகள் நிழற்குடை அமைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் மற்றும் பயணிகள் நன்றி தெரிவித்தனர்.