நாகர்கோவில் இருளப்பபுரம் பாவலர் நகர் பகுதியில் சாலையில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் ஒரு இடத்தில் சாக்கடை குழாயின் மூடி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள், பாதசாரிகள் நலன்கருதி சேதமடைந்த பாதாள சாக்கடை குழாய் மூடியை விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜ்குமார், பாவலர்நகர்.