விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியினர் அச்சமயத்தில் சாலையில் நடந்து செல்வதற்கு அச்சமடைந்து வருகின்றனர். மேலும் தினந்ததோறும் நாய்க்கடியால் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.