சிதம்பரத்தில் பெருமாள் தெரு, பொியார் பேருந்து நிலையம், அனந்தீஸ்வரர் கோவில் குளம் மேற்கு பகுதி, கொத்தங்குடி செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வெளியில் பொதுமக்கள் இயற்கை உபாதையை கழிக்கின்றனர். இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
