புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கிராம நூலகம் ஒன்று தொடங்கப்பட்டது. இதனை அப்பகுதி பொதுமக்கள், மாணவ-மாணவிகள் தினமும் நூலகம் படிக்க பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் கடந்த பல ஆண்டுகளாக நூலகம் பூட்டியை கிடக்கிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் வேறு இடங்களுக்கு சென்று நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதால் பூட்டியே கிடக்கும் நூலகத்தை திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.