பெரம்பலூர் நகராட்சி பகுதியில் தெப்பகுளம் ஒன்று உள்ளது. இந்த தெப்பக்குளத்தை சுற்றி உட்கார்ந்து சிலர் மது அருந்தியும், சூதாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த வழியாக பெண்கள், மாணவிகள் நடந்து செல்லவே முடியவில்லை. மேலும் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.