செடி, கொடிகளை அகற்ற கோரிக்கை

Update: 2025-02-16 13:07 GMT
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள், அரசு அலுவலர்கள் வந்து செல்கின்றனர். இதனால் தினமும் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக இயங்கி வருகிறது. இந்தநிலையில் இந்த வளாகத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியை சுற்றி ஏராளமான செடி, கொடிகள் வளர்ந்து குடிநீர் தொட்டியை தெரியாத நிலையில் உள்ளது. எனேவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்