தெருநாய்கள் தொல்லை

Update: 2025-02-09 14:56 GMT
  • whatsapp icon

நாமக்கல் மாநகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இவற்றில் அனைத்து வார்டுகளிலும் உள்ள பொதுவான பிரச்சினையாக தெருநாய்கள் தொல்லை இருந்து வருகிறது. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்தி கடிப்பது, நாய்களுக்கு பயந்து வேகமாக சென்று விபத்தில் சிக்குவது போன்றவை வாடிக்கையாக இருந்து வருகிறது. இதனால் சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண்கள் அச்சத்துடன் சென்று வரும் அவலநிலை உள்ளது. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்